/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ADDED : ஆக 26, 2025 01:06 AM
கரூர், கரூர் அருகே, கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்ககோரி, பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து, மத்திப்பட்டி கிராமத்தில் அனைத்து தரப்பு, சமூக மக்களும் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், குற்ற பின்னணி கொண்ட சில தனி நபர்கள் பொது அமைப்புகளில் சேர்ந்து கொண்டு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி, சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். குற்ற பின்னணி கொண்ட தனி நபர்கள் மீது, கரூர் மாவட்ட நிர்வாகம் காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.