தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கோடங்கிப்பட்டி சாலையில் கூடுதல் விளக்கு வேண்டும்

கோடங்கிப்பட்டி சாலையில் கூடுதல் விளக்கு வேண்டும்

கோடங்கிப்பட்டி சாலையில் கூடுதல் விளக்கு வேண்டும்


ADDED : அக் 30, 2024 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர், கோடங்கிப்பட்டி பகுதியில் கூடுதலாக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி வழியாக திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு, பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கோடங்கிப்பட்டியில் இருந்து, பத்தாம்பட்டி வரை சாலையின் இருபுறத்திலும் போதுமான தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

இந்த சாலையில், ஆபத்தான வளைவுகள் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி, செயின் பறிப்பு போன்ற பல்வேறு வழிபறி சம்பவங்கள் நடக்க ஏதுவாக அமைகிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி, கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us