தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரயில்வே குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு தேவை

ரயில்வே குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு தேவை

ரயில்வே குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு தேவை


ADDED : நவ 06, 2025 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2025 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், 'கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே குகை வழிப்பாதையில், போதிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும்' என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

ரயில்வே கேட்களை, நிரந்தமாக மூடும் வகையிலும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், அதிகப்படியான வாகனங்கள் செல்லும் ரயில்வே கேட் பகுதியில், குகை வழிப்பாதை அல்லது மேம்பாலம் கட்டும் நடவடிக்கையில், ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடத்தில் தொழிற்பேட்டை- சணப்பிரட்டி இடையே குகை வழிப்பாதை கட்டும் பணி சமீபத்தில் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது.

தற்போது, குகை வழிப்பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.அதன் வழியாக, பொதுமக்கள் சணப்பிரட்டி உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், குகை வழிப் பாதையில், இரண்டு பக்கமும் உள்ள மின் விளக்குகள் போதுமானதாக இல்லை. இரவு நேரத்தில் குகை வழிப்பாதையாக நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், மழைநீர் குகை வழிப்பாதையில் தேங்குவதை தடுக்க, மேற்கூரை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. எனவே தொழிற்பேட்டை-சணப்பிரட்டி இடையே உள்ள, ரயில்வே குகைவழிப் பாதையில் கூடுதல் மின் விளக்குள் அமைக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us