/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அறுவடை பணிக்காக அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு
/
அறுவடை பணிக்காக அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு
அறுவடை பணிக்காக அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு
அறுவடை பணிக்காக அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு
ADDED : ஜன 28, 2025 07:09 AM
கரூர்: அமராவதி அணையில் இருந்து, அறுவடை பணிக்காக ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று காலை அதிகரிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் நிலவரப்படி வினாடிக்கு, 57 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 250 கன அடியாக அதிகரித்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று காலை, 8:00 மணிக்கு சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, 379 கன அடியில், 474 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 82.35 அடியாக இருந்தது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 4,517 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக, 3,867 கன அடி தண்ணீரும், இரண்டு பாசன வாய்க்காலில், 650 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.30 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 74 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.