/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒப்பந்த தொழிலாளர் முறையை நீக்க ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை
/
ஒப்பந்த தொழிலாளர் முறையை நீக்க ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை
ஒப்பந்த தொழிலாளர் முறையை நீக்க ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை
ஒப்பந்த தொழிலாளர் முறையை நீக்க ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை
ADDED : ஏப் 29, 2024 07:15 AM
கரூர் : 'தமிழகத்தில் ஒப்பந்த தொழிலாளர் முறையை நீக்க வேண்டும்' என, ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
கரூரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில், துாய்மை தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட செலயாளர் பாரதி தலைமை வகித்தார். மாநிலம் முழுதும் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும். 480 நாட்கள் பணி முடித்த ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை, இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
ஈ.எஸ்.ஐ., - பி.எப்., போன்ற பணப்பலன்கள் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில துாய்மை தொழிலாளரணி தலைவர் பாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட துாய்மை தொழிலாளரணி செயலாளர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

