/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை
/
ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை
ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை
ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை
ADDED : மே 29, 2024 07:22 AM
கரூர் : ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், ஆதி திராவிடர் நலத்துறை மூலம், 17 தொடக்கப்பள்ளிகள், 2 நடுநிலைப்பள்ளிகள், 5 உயர்நிலைப்பள்ளிகள், 3 மேல் நிலைப்பள்ளிகள் என மொத்தம், 27 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நந்தன்கோட்டை, சணப்பிரட்டி, நெய்தலுார் உயர்நிலைப்பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் புன்னம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆதிதிராவிட நல ஊக்கத்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை, துாய்மை பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, திறனறித் தேர்வு ஊக்கத்தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அருகாமையில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர்கள் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.