/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் பிரச்னையில் கைகலப்பு அ.தி.மு.க., கிளை செயலர் பலி
/
குடிநீர் பிரச்னையில் கைகலப்பு அ.தி.மு.க., கிளை செயலர் பலி
குடிநீர் பிரச்னையில் கைகலப்பு அ.தி.மு.க., கிளை செயலர் பலி
குடிநீர் பிரச்னையில் கைகலப்பு அ.தி.மு.க., கிளை செயலர் பலி
ADDED : ஏப் 27, 2024 09:54 AM
கரூர்: கரூர் அருகே, குடிநீர் பிரச்னையின் போது ஏற்பட்ட கைகலப்பில், அ.தி.மு.க., கிளை செயலர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், அச்சமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், 62; அ.தி.மு.க., கிளை செயலர். இவரது மனைவி ராஜேஸ்வரி, 50; சோமூர் பஞ்., 2 வது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 40, அவரது மனைவி ரஞ்சிதா, 35, ஆகியோர் நேற்று முன்தினம் காலை, ராமலிங்கம் வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டு, வார்டில் குடிநீர் வரவில்லை என, தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.
அப்போது, ராமலிங்கத்துக்கும், மணிகண்டனுக்கும், இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதில், கீழே விழுந்த ராமலிங்கம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, ராமலிங்கத்தின் மகன் தனபால், 28, கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள, மணிகண்டனின் மனைவி ரஞ்சிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.