/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட வளர்ச்சிக்கு அ.தி.மு.க.,தான் காரணம்; மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
/
கரூர் மாவட்ட வளர்ச்சிக்கு அ.தி.மு.க.,தான் காரணம்; மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
கரூர் மாவட்ட வளர்ச்சிக்கு அ.தி.மு.க.,தான் காரணம்; மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
கரூர் மாவட்ட வளர்ச்சிக்கு அ.தி.மு.க.,தான் காரணம்; மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
ADDED : ஏப் 17, 2024 02:11 AM
கரூர்:கரூர்
அருகே, காமராஜர் நகரில் நடந்த, பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க.,
வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க.,
செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:
தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்த போது, புகழூரில் காகித ஆலை
கொண்டு வரப்பட்டது. கடந்த, 1991-96ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த
போது, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து, காகித ஆலை
விரிவாக்கம் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் கரூர் மாவட்டத்தில் முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர்
பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் புகழூரில் தாலுகா,
காவிரியாற்றில் கதவணை, க.பரமத்தி, அரவக்குறிச்சிக்கு புதிய
குடிநீர் திட்டம், கரூரில் அரசு மருத்துவ கல்லுாரி, தரகம்பட்டியில்
அரசு கலைக்கல்லுாரி உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
கரூர் மாவட்டத்தின் ஓட்டு மொத்த வளர்ச்சிக்கு காரணம், அ.தி.மு.க., ஆட்சி
தான். அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலை வெற்றி பெற வைத்தால்,
லோக்சபா கூட்டம் நடக்கும் நாளை தவிர, மற்ற நாட்களில் கரூரில்தான்
இருப்பார். இந்த தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை வெற்றி
பெற வைத்து, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர்
பழனிசாமியை முதல்வராக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட
அவைத்தலைவர் திருவிகா, கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கமலகண்ணன்,
ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வன் மற்றும் கூட்டணி கட்சியினர்
உடனிருந்தனர்.

