/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பா.ஜ., காங்., இடையே போட்டியால் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மாஜி அமைச்சர்
/
பா.ஜ., காங்., இடையே போட்டியால் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மாஜி அமைச்சர்
பா.ஜ., காங்., இடையே போட்டியால் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மாஜி அமைச்சர்
பா.ஜ., காங்., இடையே போட்டியால் அ.தி.மு.க.,வுக்கு தோல்வி: மாஜி அமைச்சர்
ADDED : நவ 11, 2024 07:52 AM
கரூர்: ''கடந்த எம்.பி., தேர்தலில், பா.ஜ., காங்., கட்சி இடையே போட்டி இருந்ததால், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி ஏற்பட்டது,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில், தனியார் திருமண மண்டப்பத்தில், நேற்று நடந்தது. கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:
கடந்த, எம்.பி., தேர்தலில், 39 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டதாக, தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர். ஆனால், தி.மு.க., 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த, 2014ல், 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க., 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த எம்.பி., தேர்தலில் பா.ஜ., காங்., கட்சிகள் இடையேதான் போட்டி ஏற்பட்டது. அ.தி.மு.க.,வுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. அதனால், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி ஏற்பட்டது. எம்.பி., தேர்தல் தோல்வியை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
வரும் சட்டசபை தேர்தலுக்குள், தி.மு.க., கூட்டணி கண்டிப்பாக உடையும். வரும் சட்டசபை தேர்தலில், பலமான கூட்டணியை இ.பி.எஸ்., அமைப்பார். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, அ.தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் வேலுமணி, அமைப்பு செயலாளர் சின்னசாமி உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.