sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை தொகுதியில் அ.தி.மு.க., வீழ்ச்சி நகராட்சியில் இரட்டை இலக்கத்தில் ஓட்டுக்கள்

/

குளித்தலை தொகுதியில் அ.தி.மு.க., வீழ்ச்சி நகராட்சியில் இரட்டை இலக்கத்தில் ஓட்டுக்கள்

குளித்தலை தொகுதியில் அ.தி.மு.க., வீழ்ச்சி நகராட்சியில் இரட்டை இலக்கத்தில் ஓட்டுக்கள்

குளித்தலை தொகுதியில் அ.தி.மு.க., வீழ்ச்சி நகராட்சியில் இரட்டை இலக்கத்தில் ஓட்டுக்கள்


ADDED : ஜூன் 09, 2024 03:55 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: குளித்தலை தொகுதியில், அ.தி.மு.க., ஓட்டுக்கள் சரிந்து வரும் நிலையில், நகராட்சியில் இரட்டை இலக்கத்தில் பெற்றது அதிர்ச்சி அளித்துள்ளது.

பெரம்பலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்டு, குளித்தலை சட்டசபை தொகுதி உள்ளது. இங்கு நடந்த, 15 சட்டசபை தேர்தல்களில், 7 முறை தி.மு.க., 5 முறை அ.தி.மு.க., தலா ஒரு முறை காங்.,- இ.கம்யூ., வெற்றி பெற்ற தொகுதியாகும். 1989ல், அ.தி.மு.க., பிரிந்து இருந்த போது ஜெ., அணியில் பாப்பாசுந்தரம் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க., கோட்டையாக இருந்த தொகுதி, 2016 முதல் உட்கட்சி மோதல் காரணமாக தொகுதியை இழந்து வருகிறது. 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்த போதும், 77 ஆயிரத்து, 289 ஓட்டுக்களை பெற்றது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 37 ஆயிரத்து, 742 ஓட்டுக்களை பெற்றுள்ளது. கடந்த தேர்தலை காட்டிலும், 39 ஆயிரத்து, 547

ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளது. 2021 தேர்தலை விட, 19.75 சதவீதம் குறைந்துள்ளது.

2021 சட்டசபை தேர்தலில் குளித்தலை நகராட்சியில், 24 வார்டுகளில், 5,146 ஓட்டுக்கள் வாங்கி உள்ளது. 2021 நகர்புற உள்ளாட்சி தேர்தலில், நகராட்சியில் ஒரு வார்டு வெற்றி பெற்ற நிலையில், 4,365 ஓட்டுக்களை பெற்றது. லோக்சபா தேர்தலில், 2,031 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளது. ஓட்டு விகிதாச்சார அடிப்படையில், 2021ல், 30.15 சதவீதமாக இருந்த ஓட்டுக்கள், 2024ல், 12.14 சதவீதமாக குறைந்துள்ளது.

இங்குள்ள, 24 பூத்களில், 600 முதல், 1,050 வரை ஓட்டுக்கள் இருக்கும் நிலையில், 6 பூத் தவிர மற்ற, 18 பூத்களில் இரட்டை இலக்கத்தில், அ.தி.மு.க., ஓட்டுக்களை பெற்றுள்ளது. இதற்கு மாறாக, பா.ஜ., கூட்டணியில் ஐ.ஜே.கே., 1,976 ஓட்டு, நாம் தமிழர், 1,824 ஓட்டுக்களை பெற்றுள்ளன. தன் பாரம்பரியமான ஓட்டு வங்கியில் சராசரியாக, 20 சதவீதத்தை குளித்தலையில் அ.தி.மு.க., இழந்துள்ளது.






      Dinamalar
      Follow us