/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., பஞ்., தலைவர் மாரடைப்பால் உயிரிழப்பு
/
அ.தி.மு.க., பஞ்., தலைவர் மாரடைப்பால் உயிரிழப்பு
ADDED : ஜன 27, 2024 04:03 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த இனுங்கூர் பஞ்சாயத்தில், நேற்று காலை, 9:00 மணியளவில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதில், பஞ்., தலைவர் குமார், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, இனுங்கூர் மாரியம்மன் கோவில் முன் நடந்த கிராம சபை கூட்டத்தில் பஞ்., தலைவர் குமார் தலைமை வகித்து கூட்டத்தை முடித்தார். பின், பஞ்., தலைவர் குமார் வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உறவினர்கள், அவரை மீட்டு பெட்டவாய்த்தலை தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பஞ்., தலைவர் குமார் உயிரிழந்தார். உயிரிழந்த  குமார்,  இரண்டாவது முறை பஞ்., தலைவராகவும், கரூர் மாவட்ட, எம்.ஜிஆர்., மன்ற இணை செயலாளராகவும் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

