/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை
/
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை
ADDED : மார் 20, 2024 01:42 AM
குளித்தலை:குளித்தலை,
ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை தேர்தல் பணியில்
ஈடுபடும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உதவி
தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்.டி.ஓ.,வுமான தனலட்சுமி தலைமை
வகித்தார். நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார் சுரேஷ்,
நகராட்சி கமிஷனர் நந்தகுமார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்,
தங்கள் பகுதியில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள், சுவர்
விளம்பரங்கள் அகற்றுதல், வாக்குச்சாவடி மையத்தில் பழுது சரி செய்தல்,
கோவில் விசேஷங்கள், அனைத்து பொது நிகழ்ச்சிகள் உடனுக்குடன் தேர்தல்
நடத்த உதவி அலுவலரிடம் தெரிவித்தல், அதற்கான ஒப்புதல் பெறுதல்,
மேலும் தேர்தல் நடைமுறை விதிகள் பின்பற்றுதல் குறித்து ஆலோசனை
வழங்கப்பட்டது.
ஆர்.ஐ.,க்கள், மண்டல துணை தாசில்தார்கள்,
வி.ஏ.ஓ.,க்கள், யூனியன் கமிஷனர்கள், டவுன் பஞ்., செயல் அலுவலர்கள்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

