/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை
/
ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை
ADDED : ஜன 01, 2026 04:34 AM

குளித்தலை: குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், ஆர்.டி. மலையில் 64ம் ஆண்டாக ஜன., 17ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்து-வது தொடர்பாக, முன்னேற்பாடு குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குளித்தலை அடுத்த ஆர்.டி. மலை விரையாச்சிலை ஈஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன் மற்றும் கோலமாயிரம் கொண்ட பிடாரியம்மன் கரையூர் நீலமேகம் கோவில் ஊர் பொதுமக்கள் சார்-பாக, 64ம் ஆண்டாக இந்தாண்டு ஜன., 17 காலை மாட்டு வேடிக்கை ஜல்லிக்கட்டு நடத்துவதாக ஊர் பொதுமக்கள், விழா குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவது சம்பந்-தமாக, குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமையில் முன்-னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., செந்தில்-குமார், குளித்தலை தாசில்தார் இந்துமதி, தோகைமலை இன்ஸ்-பெக்டர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்தாண்டை விட, இந்தாண்டு சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் அளிக்கும் கட்டளைகளை ஏற்று, சிறப்பு சேர்க்கும் வகையில் நடத்த வேண்டும். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளில் மகளிருக்கு, 10 சதவீத டோக்கன் வழங்க வேண்டும். மகளிருக்கு அடிப்படை வசதிகளை செய்வது. அனைத்து துறை அரசு அதிகாரிகளும் உடனிருந்து சிறப்-பாக செயல்படுவோம் என தெரிவித்தனர்.
முன்னேற்பாடு ஆலோசனை கூட்டத்தில் விழா குழுவினர், கால்நடை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தீய-ணைப்பு துறை, மருத்துவத்துறை அலுவலர்கள் கலந்து கொண்-டனர்.

