தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஓட்டு எண்ணிக்கை பணியில் கவனம்தி.மு.க., ஏஜன்டுகளுக்கு 'அட்வைஸ்'

ஓட்டு எண்ணிக்கை பணியில் கவனம்தி.மு.க., ஏஜன்டுகளுக்கு 'அட்வைஸ்'

ஓட்டு எண்ணிக்கை பணியில் கவனம்தி.மு.க., ஏஜன்டுகளுக்கு 'அட்வைஸ்'


ADDED : மே 03, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூரில், தி.மு.க., சார்பில் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும், வேட்பாளர் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்து, காணொளி காட்சி வாயிலாக பேசினார். இதில், தேர்தல் பிரிவினர் அறிவித்துள்ள நேரத்திற்கு, ஒரு மணி நேரம் முன்னதாகவே, ஏஜன்டுகள், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள் சென்று விட வேண்டும். அடையாள அட்டை உள்ளிட்ட தேவையான பொருட்களை மறவாமல் எடுத்து செல்ல வேண்டும். உள்ளே சென்றதும், தங்களுக்கான இடத்தில் சென்று அமர வேண்டும். ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

தபால் ஓட்டு எண்ணிக்கைக்கு செல்வோரும், விழிப்பாக இருக்க வேண்டும். கன்ட்ரோல் யூனிட்டில் வைக்கப்பட்ட சீல் சரியாக உள்ளதா, பூத் ஏஜன்டுகளின் கையெழுத்து சரியாக இருக்கிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும் உள்பட பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், தி.மு.க., வேட்பாளர்கள் தியாகராஜன், இளங்கோ, ராஜா, சந்திரன், கரூர் மாநகராட்சி மாநகர செயலர் கனகராஜ், மாநகர பகுதி செயலர்கள் ராஜா, குமார், ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us