/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முருங்கையில் தேயிலை கொசு தாக்கம் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
/
முருங்கையில் தேயிலை கொசு தாக்கம் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
முருங்கையில் தேயிலை கொசு தாக்கம் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
முருங்கையில் தேயிலை கொசு தாக்கம் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஆக 29, 2025 01:17 AM
அரவக்குறிச்சி, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளை கொண்டு, முருங்கையில் தேயிலை கொசு தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என, அரவக்குறிச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சாகுல் இம்ரான் அலி ஆலோசனை கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேயிலை கொசு பூச்சியானது, முருங்கையின் இளம் தளிர்களில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால், சொறி போன்ற காயங்கள் தண்டு பகுதிகளில் ஏற்படுதல், தொடர்ந்து இந்த பூச்சி சாறு உறிஞ்சுவதால் முருங்கை குருத்துகள் வாடி, பசை போன்ற திரவம் குருத்தின் வெளிப்புறத்தில் காணப்படும். தேயிலை கொசுக்கள் நுனியில் உள்ள குருத்துகளை தாக்கி, முதலில் தண்டின் நுனி குருத்துளை காய செய்கிறது. பிறகு மொத்த தண்டினையும் காயப்படுத்துவதுடன் இலைகளும் கொட்டிவிடும். மிகுந்த பாதிப்புள்ளாகும் முருங்கை மரங்களில், அனைத்து இலைகளும் கொட்டி மரம் மொட்டையாக காணப்படுவது இதன் அறிகுறியாகும்.
பூச்சியின் தாக்குதல் தென்பட்டால், ஆரம்ப நிலையில் வேப்ப எண்ணெய் 3 சதவீதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். பியூவேரியா பாசியானா ஒரு லிட்டருக்கு 2 கிராம் தெளிக்க வேண்டும். புதிய தளிர் தோன்றுவது முதல், காய்கள் உருவாகும் வரை, சீரான இடைவெளியில் கிலோதியானிடின், 50 சதவீதம் டபல்யூடிஜி 10 லிட்டருக்கு 2.5 கிராம், தியாக்ளோபிரிட் 21.7 சதவீதம், எஸ்சி ஒரு லிட்டருக்கு 1 மில்லி, தியாமெதாக்சம் 25 சதவீதம் டபல்யூடி 10 லிட்டருக்கு 2 கிராம் ஆகிய மூன்று முறை பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். பூச்சிக்கொல்லி மருந்தை 15 நாட்கள் இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

