/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து சமூக அமைப்புகள் சார்பில் தொகுதி வளர்ச்சி குறித்து ஆலோசனை
/
அனைத்து சமூக அமைப்புகள் சார்பில் தொகுதி வளர்ச்சி குறித்து ஆலோசனை
அனைத்து சமூக அமைப்புகள் சார்பில் தொகுதி வளர்ச்சி குறித்து ஆலோசனை
அனைத்து சமூக அமைப்புகள் சார்பில் தொகுதி வளர்ச்சி குறித்து ஆலோசனை
ADDED : பிப் 07, 2024 11:45 AM
குளித்தலை: குளித்தலையில், அனைத்து சமூக அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில், தொகுதி வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவிரி படுகை விவசாயிகள் சங்க தலைவரும், முன்னாள் வேளாண் அறிவியல் கல்லுாரி முதல்வருமான ஜெயராமன் தலைமை வகித்தார். உழவர் மன்ற அமைப்பாளர் கோபாலதேசிகன், குளித்தலை மக்கள் நலவாழ்வு சங்க தலைவர் கிராமிய நாராயணன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் ஜெயமூர்த்தி, நலவாழ்வு சங்க செயலாளர் கார்த்திக்கேயன், லயன்ஸ் சங்க தலைவர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இக்கூட்டத்தில், மருதுார் முசிறி காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அறிவிக்கப்பட்டும், செயல்படுத்தாத நிலை இருந்து வருகிறது. வரும் நிதியாண்டில் அதே இடத்தில் கதவணை அமைக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் துார்ந்து போன பாசன வாய்க்கால்களை துார்வார வேண்டும். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில், திம்மாச்சிபுரம் முதல் மருதுார் வரை உள்ள காவிரி தென்கரையில், ஏதேனும் ஒரு பகுதியில் மாநில தாவரவியல் பூங்கா அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்.
நகராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் ஸ்டாண்டு, பத்திரப் பதிவு அலுவலகம், வியாபாரம் அதிகம் நடக்கும் இடங்களில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிப்பிட வசதிகள் அமைக்க வேண்டும், குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் சேதமான பாலங்களை அகற்றிவிட்டு, புதிய பாலங்கள் கட்ட வேண்டும். பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவு நீர் மறுசுழற்சி மேலாண்மை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

