sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் செடிகள்: அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு

ரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் செடிகள்: அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு

ரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் செடிகள்: அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மே 20, 2025 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 02:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு



கரூர்,

மழை பெய்ய தொடங்கிய நிலையில், கரூர் அருகே கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் அருகே கொளந்தானுார் பகுதியில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி, கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், கழிவுநீர் வாய்க்கால் தெரியாத அளவில், செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவுநீர் வாய்க்காலில் செல்லாமல், சாலையில் ஓடும் அபாயம் உள்ளது.

சில மாதங்களுக்கு முன், கரூர் நகரில் பலத்த மழை பெய்த போது, வாய்க்காலில் இருந்து கழிவுநீர், மழைநீருடன் வெளியேறி திருச்சி சாலையில் ஓடியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தற்போது மாவட்டம்

முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. கரூர் நகரிலும் கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதிகளவில் மழை பெய்யும் போது, வாய்க்காலில் இருந்து கழிவுநீர், மழைநீர் திருச்சி சாலையில் ஓடுவதை தடுக்க, கொளந்தானுார் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் உள்ள, செடிகளை அகற்ற கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி

நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us