sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஒருநாள் மழைக்கே குளம்போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் சாலை மறியல்

/

ஒருநாள் மழைக்கே குளம்போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் சாலை மறியல்

ஒருநாள் மழைக்கே குளம்போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் சாலை மறியல்

ஒருநாள் மழைக்கே குளம்போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் சாலை மறியல்


ADDED : அக் 14, 2024 05:20 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலையில் பெய்த ஒருநாள் மழைக்கே, குடியிருப்பு, அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள், பஸ்சை மறித்து சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.

குளித்தலை சுற்றுவட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் மேல ஆரியம்பட்டி, கீழ ஆரியம்பட்டி கிராமங்களில் மழைநீர் வெளியேற வடிகால் வசதியின்றி, குடியி-ருப்புக்குள் புகுந்தது. மேலும், ராணி மங்கம்மாள் நெடுஞ்சா-லையின் குறுக்கே மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. கீழ ஆரியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கியது.இப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகத்திடம், மழை காலத்திற்கு முன்பே வடிகாலை துார்வாரி கொடுக்க வேண்டும் என, பல-முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், பஞ்., நிர்வாகம் கண்டு-கொள்ளாததால், நேற்று முன்தினம் இரவு பெய்த கனம-ழையால், குடியிருப்பு பகுதி, கோவில், அரசுப்பள்ளி வளாகத்-திற்குள் தண்ணீர் புகுந்தது. கால்நடைகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த கீழ ஆரியம்பட்டி மக்கள், பஞ்., நிர்-வாகத்தை கண்டித்து, ராணி மங்கம்மாள் சாலையில் சென்ற அரசு பஸ்சை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், மருதுார் டவுன் பஞ்., ஆதிநத்தம், கணேசபுரம் பகு-தியில் மழைநீர், விவசாய நிலம், குடியிருப்புக்குள் புகுந்தது. டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நங்க-வரம் டவுன் பஞ்., சவாரி மேடு, பாதிக்காடு, குறிச்சி கிரா-மத்தில் மழைநீர் விவசாய நிலம், குடியிருப்பு பகுதிக்குள்

புகுந்தது.

சவாரிமேடு, பாதிக்காடு கிராமத்தில் சாலையின் குறுக்கே மழைநீர்

ஆறுபோல் ஓடியது. நெய்தலுார் பஞ்., பெரியபனையூர், நெய்-தலுார் காலனி, கவுண்டம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்தது. மேட்டு மருதுார் , மருதுார், வீரம்பூர், ராஜேந்-திரம், பரளி பகுதியில் வாழை, நெல் பயிரிட்டிருந்த விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கியது.






      Dinamalar
      Follow us