/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆமை வேகத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக பணி
/
ஆமை வேகத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக பணி
ADDED : பிப் 02, 2025 01:13 AM
ஆமை வேகத்தில் அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிேஷக பணி
கரூர்,: கரூர் அருகே, அகஸ்தீஸ்வரர் கோவிலில், கும்பாபிேஷக பணி ஆமை வேகத்தில் நட ந்து வருகிறது. கரூர் மாவட்டம், திருமுக்கூடலுாரில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் இணையும் இடத்தில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் சிதிலம் அடைந்த நிலையில், இருந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என, கரூர் மாவட்ட பக்தர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் கடந்தாண்டு பிப்., மாதம், 5 கோடி ரூபாய் செலவில், அகஸ்தீஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபி ேஷகம் நடத்தும் வகையில் பணிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
ஆனால், கும்பாபிேஷக பணி தொடங்கப்பட்டு, ஓராண்டு நெருங்கும் நிலையில் அகஸ்தீஸ்வரர் கோவிலில், 20 சதவீத பணி கூட நடக்கவில்லை எனவும், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:கரூர் திருமுக்கூடலுார் அகஸ்தீஸ்வரர் கோவிலில், கும்பாபிேஷக பணி எதிர்பார்த்த அளவில் நடக்கவில்லை. வரும், 2026 ல் கும்பாபிேஷகம் நடத்தப்படும் என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஆனால், பணிகள் தொய்வாக இருப்பதால், கும்பா பிேஷகம் அடுத்தாண்டு நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதனால், கும்பாபிேஷக பணிகளை, விரைவாக முடிக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.