ADDED : மே 15, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
கரூர் கரூர் மாவட்டம், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரர் கோவிலில், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் குறைய வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு எம்பெருமான் ஈசனாரை குளிர்விக்கும் வண்ணம் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
