/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே வேளாண்மை முகாம்
/
அரவக்குறிச்சி அருகே வேளாண்மை முகாம்
ADDED : ஜூன் 14, 2025 07:41 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள, 22 வருவாய் கிராமங்களில் இரண்டு கிராமங்களான வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட வேளாண்மை முகாம் நேற்று நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
அரவக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா, விவசாயிகளுக்கு திட்ட விளக்கவுரை குறித்து பேசினார். வேளாண் பொறியியல் துறை, கால்நடை துறை, வேளாண் கூட்டுறவு சங்கம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர், விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கப்பட்டன.
தோட்டக்கலை சார்பாக விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.