/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.49 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.49 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : மே 20, 2025 07:25 AM
கரூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 49 லட்சத்து, 40 ஆயிரத்து, 584 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு நேற்று, 7,383 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 42.99 ரூபாய், அதிகபட்சமாக, 60.99 ரூபாய், சராசரியாக, 56.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 2,321 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 1 லட்சத்து, 20 ஆயிரத்து, 681 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 184.01, அதிகபட்சமாக, 189.49, சராசரியாக, 188.11, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 117.39, அதிகபட்சமாக, 186.89, சராசரியாக, 170.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 10,570 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 18 லட்சத்து, 22 ஆயிரத்து, 948 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கருப்பு ரகம் எள் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 95.09, அதிகபட்சமாக, 148.99, சராசரியாக, 127.88, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 95.42, அதிகபட்ச விலையாக, 132.69, சராசரியாக, 125.88, வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 125.99, அதிகபட்சமாக, 125.99, சராசரியாக, 125.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 25,632 கிலோ எடையுள்ள எள், 29 லட்சத்து, 96 ஆயிரத்து, 955 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 49 லட்சத்து, 40 ஆயிரத்து, 584 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.