/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.81.45 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.81.45 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : ஜூலை 10, 2025 01:16 AM
கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், நிலக்கடலை சேர்த்து, 81 லட்சத்து, 45 ஆயிரத்து, 250 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. அதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 23 ஆயிரத்து, 580 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 55.19 ரூபாய், அதிகபட்சமாக, 66.39, சராசரியாக, 65.39 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 9,495 கிலோ தேங்காய்கள், ஐந்து லட்சத்து, 88 ஆயிரத்து, 623 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 248.61, அதிகபட்சமாக, 253.21, சராசரியாக, 252.99, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 195.39, அதிகபட்சமாக, 247.17, சராசரியாக, 235.49 ரூபாய்க்கு ஏலம் போனது. 30 ஆயிரத்து, 590 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 73 லட்சத்து, 75 ஆயிரத்து, 971 ரூபாய்க்கு விற்பனை நடந்துது.
ஒரு கிலோ நிலக்கடலை குறைந்தபட்சமாக, 60.80, அதிகபட்சமாக, 67.41, சராசரியாக, 66.09 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 2,739 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 1 லட்சத்து, 80 ஆயிரத்து, 656 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், நிலக்கடலை சேர்த்து, 81 லட்சத்து, 45 ஆயிரத்து, 250 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.