/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.51.25 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.51.25 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : ஜன 02, 2025 07:28 AM
கரூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை சேர்த்து, 51 லட்சத்து 25 ஆயிரத்து 411 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய் அன்று, 6,440 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்-தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 35.05 ரூபாய், அதிகபட்ச-மாக, 45.36 ரூபாய், சராசரியாக, 42.25 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 1,903 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 77 ஆயிரத்து 857 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 137.17 ரூபாய், அதிக-பட்சமாக, 153.49 ரூபாய், சராசரியாக, 148.61 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 106.88 ரூபாய், அதிகபட்ச-மாக, 149.49 ரூபாய், சராசரியாக, 128.42 ரூபாய்க்கு ஏலம் போனது. 15,285 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு, 20 லட்-சத்து, 19 ஆயிரத்து, 195 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. வெள்ளை ரகம் எள் ஒரு கிலோ அதிகபட்சமாக, 141.99 ரூபாய், சராசரியாக, 136.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 21,209 கிலோ எடையுள்ள எள், 28 லட்சத்து, 52 ஆயிரத்து, 539 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் நடந்த நிலக்க-டலை ஏலத்தில், ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 63.30 ரூபாய், அதிகபட்சமாக, 72.86 ரூபாய், சராசரியாக, 68.20 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 2,661 கிலோ எடையுள்ள நிலக்க-டலை, 1 லட்சத்து, 75 ஆயிரத்து, 820 ரூபாய்க்கு விற்பனையா-னது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை சேர்த்து, 51 லட்சத்து, 25 ஆயிரத்து, 411 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

