/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
16 கிராமத்தில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் துவக்கம்
/
16 கிராமத்தில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் துவக்கம்
16 கிராமத்தில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் துவக்கம்
16 கிராமத்தில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 11, 2025 01:41 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், 16 இடங்களில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், 16 இடங்களில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் இன்று (11ம் தேதி) நடக்கிறது. கரூர் வட்டாரத்தில் நெரூர் வடக்கு, எல்.என்.சமுத்திரம், தான்தோன்றிமலை வட்டாரத்தில் ஜெகதாபி, தோரணக்கல்பட்டி, அரவக்குறிச்சி வட்டாரத்தில், அரவக்குறிச்சி, சேந்தமங்கலம் மேற்கு, க.பரமத்தி வட்டாரத்தில், நஞ்சைக்காளக்குறிச்சி, நெடுங்கூர், குளித்தலை வட்டாரத்தில், ராஜேந்திரம் வடக்கு, மணத்தட்டை, தோகைமலை வட்டாரத்தில் பொருந்தலுார், வடசேரி, கடவூர் வட்டாரத்தில், மஞ்சநாயக்கன்பட்டி, டி.இடையப்பட்டி கிழக்கு கிராமம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மத்தகிரி, கிருஷ்ணராயபுரம் தெற்கு கிராமத்தில் நடக்கிறது.
இதில், நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், அரசு திட்டங்கள் பற்றிய தகவல், உயிர்ம வேளாண்மை சாகுபடி குறித்த வழிகாட்டுதல், வேளாண் விற்பனை சம்பந்தப்பட்ட தகவல்கள், கூட்டுறவு சங்கங்களிலும், வங்கிகளிலும் பயிர்க்கடன் பெற தேவையான உதவி உள்பட பல்வேறு ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.