/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ரூ.61.96 லட்சம் மதிப்பில் வேளாண் திட்டங்கள்; கலெக்டர்
/
கரூரில் ரூ.61.96 லட்சம் மதிப்பில் வேளாண் திட்டங்கள்; கலெக்டர்
கரூரில் ரூ.61.96 லட்சம் மதிப்பில் வேளாண் திட்டங்கள்; கலெக்டர்
கரூரில் ரூ.61.96 லட்சம் மதிப்பில் வேளாண் திட்டங்கள்; கலெக்டர்
ADDED : டிச 21, 2024 01:09 AM
கரூர், டிச. 21-
மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள், 8,000 ஏக்கர் பரப்பளவில், 61.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என, கலெக்டர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மாவத்துாரில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார். அப்போது, அவர், கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில், துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கம், நெற்பயிருக்கு மாற்றாக பயறு வகை பயிர்கள் சாகுபடியை
ஊக்குவித்தல், பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல், வேளாண் பயிர்களில் ஜிப்சம் இடுதலை ஊக்குவித்தல், நெற்பயிரில் துத்தநாக சல்பேட், ஜிப்சம் இடுதலை ஊக்குவித்தல், பலன்தரும் பருத்தி சாகுபடி, நடவு துவரை சாகுபடி மூலம் துவரை உற்பத்தியை பெருக்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
துவரை பரப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கில், சாகுபடி செய்யும் விவசாயிக்கு, 1,400 ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாய் மானியமாகவும், நடவு துவரை சாகுபடி மூலம் துவரை உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, 250 ஏக்கருக்கு, 7.75 லட்சம் ரூபாய் மானியம், பயறு வகை பயிர்களுக்கு, 50 ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் மானியமும், வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் தொழில் தொடங்குவதற்காக, 3 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி திட்டத்தில், 4.61 லட்சம் ரூபாய் மானியத்தில், 550 ஏக்கர் பரப்பு உள்பட பல்வேறு திட்டங்கள், 8,000 ஏக்கர் பரப்பளவில், 61.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.