ADDED : அக் 30, 2026 07:11 AM
அ நிறம் | அளவு
கரூர்,:கரூர் அருகே மின்னாம்பள்ளி கிராமத்தில், வட்டார வேளாண்மை துறையின் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். உதவி இயக்குனர் காதர் மொஹைதீன், இடு பொருள் இருப்பு விபரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவ்யபாரதி, திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் கூறினார்.
தொடர்ந்து வேளாண்மை அலுவலர் (நடமாடும் மண் பரிசோதனை நிலையம்) ரசிகப்பிரியா மண்மாதிரி எடுப்பதன் முக்கியத்துவம் பற்றியும், மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றியும் விவசாயிகளுக்கு தெரிவித்தார். புழுதேரி வேளாண் அறிவியல் மைய வேளாண்மை அலுவலர் தமிழ் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.
