ADDED : ஜூன் 17, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
கரூர்:கிசான்
கோஸ்தி திட்டத்தின் கீழ், தென்னிலை தெற்கு நல்லிப்பாளையத்தில்,
வேளாண் துணை இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் உழவர் விழா நடந்தது.
அதில், புதிய விவசாய தொழில்நுட்பங்கள், விவசாய அடையாள அட்டை
முக்கியத்துவம், மண்வளம் பாதுகாப்பு, முருங்கை சாகுபடி, மதிப்பு
கூட்டல், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
நவீன
வேளாண் முறைகள் குறித்தும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டது. விழாவில், கரூர் வேளாண் கல்லுாரி பேராசிரியர்
கந்தசாமி, வேளாண் உதவி இயக்குனர் ஸ்ரீபிரியா, தோட்டக்கலை உதவி
இயக்குனர் கிருத்திகா ஆகியோர் பங்கேற்றனர்.
