/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாய தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 18, 2024 01:52 AM
கரூர், : தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், 100 நாள் வேலையை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும், கார்டு வழங்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து விட்டு, விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை, பராமரிப்பு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இ.கம்யூ., கட்சி செயலாளர் நாட்ராயன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலன், நிர்வாகிகள் லட்சுமி காந்தன், மாணிக்கம், சாமிநாதன், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.