/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 16, 2025 05:44 AM
கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பாலன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, மத்திய பா. ஜ., அரசு சீர்குலைக்க கூடாது, 100 நாள் வேலை திட்டத்துக்கு, புஜ்யாபாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்ற பெயரை வைக்கக் கூடாது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் தங்கவேல், துணை செயலாளர் பாண்டியப்பன், இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் கலாராணி, துணை செயலாளர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

