ADDED : மே 16, 2026 05:16 AM

கரூர் :அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், கரூர் ஒன்றிய கிளை சார்பில் அமைப்பாளர் துரைசாமி தலைமையில், வெண்ணைமலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை சிதைக்கும் மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும், கடந்த மூன்று மாதங்களாக, வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்ககோரியும், புதிய தொழில் நுட்பம் என்ற பெயரில், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை கண்டித்தும், மாநில அரசுகளுக்கு உரிய நிதியை மத்திய பா.ஜ., அரசு ஒதுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் முருகேசன், அமைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, நிர்வாகிகள் ராஜேந்திரன், பூரணம், காதர்பாட்சா, அரவிந்த், வேலு, சக்திவேல்,
நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
