/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் மூன்றாம் கட்ட உழவரை தேடி வேளாண்மை
/
அரவக்குறிச்சியில் மூன்றாம் கட்ட உழவரை தேடி வேளாண்மை
அரவக்குறிச்சியில் மூன்றாம் கட்ட உழவரை தேடி வேளாண்மை
அரவக்குறிச்சியில் மூன்றாம் கட்ட உழவரை தேடி வேளாண்மை
ADDED : ஜூன் 28, 2025 07:53 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ், மூன்றாம் கட்டமாக உழவரை தேடி வேளாண்மை சிறப்பு முகாம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி வட்டாரத்தில், 22 வருவாய் கிராமங்களில் மூன்றாம் கட்டமாக இரண்டு வருவாய் கிராமங்களான இனுங்கனூர் மற்றும் ஆலமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா, விவசாயிகளுக்கு திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். வேளாண் பொறியியல் துறை, கால்நடை, வேளாண் கூட்டுறவு சங்கம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலை அனைத்து சகோதர துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டன. தோட்டக்கலை சார்பாக விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. உழவரை தேடி வேளாண்மை திட்டத்தின் கீழ் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், செயல் விளக்கங்கள், உழவர் நலன் சார்ந்த இதர அரசு திட்டங்கள் பற்றி தகவல், வேளாண் சாகுபடி, விதை பொருட்கள், பொருட்களை மதிப்பு கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு, சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு தொழில்நுட்ப துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.