/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராமசபை கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்
/
கிராமசபை கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்
கிராமசபை கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்
கிராமசபை கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்
ADDED : ஜன 27, 2025 02:49 AM
கரூர்: கரூர் மாநகராட்சியுடன், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சா-யத்தை இணைப்பது குறித்து, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர், ஒரே நேரத்தில் கிராமசபை கூட்டத்தில் மனு அளித்தபோது வாக்கு-வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசு தினத்தை ஒட்டி, கரூர், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்-சாயத்தில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. தான்தோன்றி-மலை ஊராட்சி ஒன்றியம், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் பஞ்., தலைவர் சாந்தி ஆகியோர், மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
அதேசமயம் 'மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்' என, தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா தலைமையிலான கட்சியினர் மனு அளித்தனர். இருதரப்பினரும் ஒரே நேரத்தில் மனு அளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையிலான போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதே-சமயம் அரசு அதிகாரிகள் தீர்மானத்தை நிறைவேற்றாமல் கிளம்பி விட்டனர்.

