ADDED : மார் 02, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மேற்கு பகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், வரும் சட்டசபை தேர்தலில், பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணிகள், தி.மு.க., அரசின் நிறைவேற்றப்படாத, வாக்குறுதிகள் குறித்து, பொதுமக்களிடம் பிரசாரம் செய்தல், சட்டசபை தேர்தலுக்கான பணிகளை நாள்தோறும் மேற்கொள்ளுதல் குறித்து, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசினார். கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலாளர் மல்லிகா, பகுதி செயலாளர் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
