ADDED : மே 25, 2026 02:27 AM
அ நிறம் | அளவு
கரூர்:குளித்தலை
சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,
பஞ்சப்பட்டி, நெய்தலுார் மற்றும் நங்கவரத்தில் நடந்தது.
அதில்,
குளித்தலை சட்டசபை தொகுதியில் ஏற்பட்ட தோல்வி குறித்தும்,
கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும், வரும் உள்ளாட்சி
தேர்தலுக்காக ஆயத்த பணிகளை தொடங்குவது குறித்தும், கரூர் மாவட்ட,
அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் விளக்கமளித்து பேசினார்.கூட்டத்தில்,
முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் இளங்குமரன்,
சந்திரசேகர், கிருஷ்ணன், பேரூர் செயலாளர் திருப்பதி, ஈரோடு மண்டல
ஐ.டி., விங்க் துணை தலைவர் பசுபதி செந்தில், நிர்வாகிகள் மகேஷ்
பாண்டியன், ராமலிங்கம், தினேஷ், சுரேஷ் உள்பட, அ.தி.மு.க.,
நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
