ADDED : ஜூன் 08, 2026 04:52 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்ட அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு அணி நிர்வாகிகள் கூட்டம்,
கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், மாவட்டம் முழுவதும் கிளை
வாரியாக, தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாட்டை கொண்டு செல்வது,
பொறுப்பாளர்களை நியமிப்பது, வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,
வேட்பாளர்களின் வெற்றிக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி உதவுவது
குறித்து, மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் விளக்கமளித்து
பேசினார். கூட்டத்தில், மாவட்ட அ.தி.மு.க., தொழில் நுட்ப பிரிவு அணி
செயலாளர் சிவராஜ், நிர்வாகிகள் டாக்டர் திவ்யா, அபிஸ் செல்வம், ஆனந்த்
உள்பட பலர் பங்கேற்றனர்.
