ADDED : நவ 19, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில்
வரும், 29ல், கரூர் வருகை தரும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர்
இ.பி.எஸ்.,க்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கரூர் சட்டசபை தொகுதி
இடைத்தேர்தலில், வெற்றி பெற களப்பணியாற்றுவது, வாக்காளர் பட்டியல்
திருத்த பணிகளை மேற்கொள்வது உள்பட, பல்வேறு பணிகள் குறித்து, மாவட்ட
அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் விளக்கம் அளித்து பேசினார்.
கூட்டத்தில்,
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மருத்துவ அணி துணை
செயலாளர் திவ்யா, மாவட்ட அ.தி.மு.க., இணை செயலாளர் மல்லிகா, துணை
செயலாளர் முத்து, பகுதி செயலாளர் காமராஜ் உள்பட, பலர் பங்கேற்றனர்.
