/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாக்காளர் பட்டியல் குளறுபடி கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு
/
வாக்காளர் பட்டியல் குளறுபடி கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு
வாக்காளர் பட்டியல் குளறுபடி கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு
வாக்காளர் பட்டியல் குளறுபடி கலெக்டரிடம் அ.தி.மு.க., மனு
ADDED : ஜூன் 03, 2025 01:06 AM
கரூர், வாக்காளர் பட்டியல் குளறுபடியால், கள்ள ஓட்டு செலுத்துவதற்கு வாய்ப்பாக அமைத்து விடும் என, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலிடம், அ.தி.மு.க., கரூர் மாவட்ட செயலர் விஜயபாஸ்கர் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளையும் சேர்த்து, 8,97,739 வாக்காளர்கள் உள்ளனர். இதில், இறப்பு, இரட்டைபதிவு, முகவரி தெரியாதவர்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்கப்படவில்லை.
வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை, அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் சாதமாக பயன்படுத்தி, கள்ள ஓட்டு செலுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் செப்டம்பரில் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலை, திருத்தம் செய்யப்பட்ட முழுமையான விபரங்களுடன் கூடிய பட்டியலாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.