/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசியல் தலையீடின்றி எஸ்.ஐ.ஆர்., பணி அ.தி.மு.க.,வினர் கலெக்டரிடம் மனு
/
அரசியல் தலையீடின்றி எஸ்.ஐ.ஆர்., பணி அ.தி.மு.க.,வினர் கலெக்டரிடம் மனு
அரசியல் தலையீடின்றி எஸ்.ஐ.ஆர்., பணி அ.தி.மு.க.,வினர் கலெக்டரிடம் மனு
அரசியல் தலையீடின்றி எஸ்.ஐ.ஆர்., பணி அ.தி.மு.க.,வினர் கலெக்டரிடம் மனு
ADDED : நவ 05, 2025 01:43 AM
கரூர் :எந்தவிதமான அரசியல் தலையீடு இன்றி, எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க., மாவட்ட செயலர் விஜயபாஸ்கர், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டி யல் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) தொடர்பான கூட்டம் கடந்த 29ல், கலெக்டர் அலுவலகத்தில் அவசர கதியில் நடந்தது. அதில் கட்சி நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, அதிகாரிகள் தெளிவாக பதிலளிக்கவில்லை.
ஒருவருக்கு இரண்டு தொகுதியில் ஓட்டு உரிமை மற்றும் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால், அவரது பெயர் எந்த வாக்காளர் பட்டியலில் நீக்கப்படும். ஒருவர் இறந்த பின், அவரது குடும்பத்தினர் உயிருடன் உள்ளதாக படிவம் வழங்கும்போது, அவரது பெயரை எந்த அடிப்படையில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்போது, அதற்கு பொறுப்பான அதிகாரி மற்றும் குடும்பத்தினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு குடும்பத்தில் மூன்று ஓட்டு உள்ள நிலையில், அவர்களை ஒரே ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க வசதியாக பட்டியல் எவ்வாறு திருத்தப்படும் போன்ற கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளிக்க வேண்டும்.
மேலும், வாக்காளர் திருத்தம் தொடர்பாக கணக்கெடுப்பு படிவத்தை நேரடியாக வீடுகளுக்கு சென்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்க வேண்டும். ஆனால், நிரந்தரமாக வெளியூரில் வசிக்கும் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் பெற்று கொள்வதாக தகவல் வருகிறது. எந்தவிதமான அரசியல் தலையீடு இல்லாமல், எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

