/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது
/
தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது
தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது
தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது
ADDED : டிச 31, 2024 07:20 AM
கரூர்: சென்னையில், அண்ணா பல்கலை கழக மாணவிக்கு ஏற்பட்ட, பாலியல் கொடுமையை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய, முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா பல்கலை கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், தி.மு.க., பிரமுகர் என தகவல் வெளியானது. பாலியல் புகாரை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த, 27ல் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சி யின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்திருந்தார். ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, ஒத்திவைக்கப்பட்டு அ.தி.மு.க., சார்பில், நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூரில் தலைமை தபால் நிலையம் முன் நடந்த, ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில், தி.மு.க., அரசை கண்டித்தும், பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி கூறிய, யார் அந்த சார் என கோஷமிட்டும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சிவசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் கமலகண்ணன் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்டவர்களை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
போஸ்டர் ஒட்ட சொன்ன மாஜி அமைச்சர்
அ.தி.மு.க., ஐ.டி., விங்க் சார்பில், பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., படத்துடன் யார் அந்த சார் என்ற போஸ்டர், நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. கரூர் மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை, போலீசார் கிழித்து எறிந்தனர். போஸ்டர் ஒட்டிய, இரண்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று கரூர் தலைமை தபால் நிலையம் அருகே, ஆர்ப்பாட்டத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அந்த பகுதியில் உள்ள தனியார் சுவற்றில், யார் அந்த சார் ? என்ற போஸ்டரை ஒட்ட சொன்னார். இதையடுத்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் மீண்டும் போஸ்டரை ஒட்டினர். அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை.