கிருஷ்ணராயபுரத்தில் அ.தி.மு.க., தொழில் நுட்ப பிரிவு ஆலோசனை
கிருஷ்ணராயபுரத்தில் அ.தி.மு.க., தொழில் நுட்ப பிரிவு ஆலோசனை
ADDED : ஜன 13, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம், மேட்டு மகா-தானபுரம் முருகன் கோவில் வளாகத்தில் நடந்-தது.
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாரி தலைமை வகித்தார். ஈரோடு மண்டல துணை தலைவர் பசுபதி கலந்து கொண்டார். வரும் சட்டசபை தேர்தலின்போது, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளின் செயல்பா-டுகள், களப்பணிகள் மற்றும் தி.மு.க., மீது விமர்சனங்களை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செய-லாளர் கார்த்திக், குளித்தலை நகர தொழில்நுட்ப பிரிவு ராமகிருஷ்ணன், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்-றிய பிரிவு செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
