/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
/
குளித்தலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
ADDED : அக் 05, 2024 06:19 AM
குளித்தலை: குளித்தலை, சுங்ககேட் ரவுண்டானாவில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில், நாட்டுப்புற கலைகள் மூலம் ெஹச்.ஐ.வி., மற்றும் பாலியல் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஆடல், பாடல் குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் சுஜாதா ஏற்பாட்டில், வடசேரி சின்னதுரை கலைக்குழுவினர், தொற்றுநோய் விழிப்புணர்வு குறித்து ஆடல், பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குளித்தலை போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் அசோகன், எஸ்.ஐ., பாஸ்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.