/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தான்தோன்றிமலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
/
தான்தோன்றிமலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு
ADDED : ஆக 10, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி நம்பிக்கை மையம் சார்பில், எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
இதனை, நம்பிக்கை மையம் ஆற்றுனர் அமல்தாஸ் தொடங்கி வைத்தார். சின்னப்பொண்ணு கலைக்குழுவினர், எச்.ஐ.வி., மற்றும் பால்வினை தொற்று குறித்து கரகாட்டம், தப்பாட்டம் மற்றும் மேளத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, புலியூர் பஸ் ஸ்டாப்பில் கரகாட்டம், ஒயிலாட்டம் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சி நடந்தது.