/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
/
கரூரில் ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 09, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தமிழக அரசு தொழிலாளர் கொள்கையை உடனடியாக வெளியிட வேண்டும், சட்டமீறலில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் மயமாவதை தடுக்க வேண்டும், சம ஊதியத்தை மீறும் கான்ட்ராக்ட், அவுட் சோர்சிங் முறைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், தேசிய குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் கலாராணி, முன்னாள் மாவட்ட செயலாளர் நாட்ராயன், ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் வடிவேலன் உள்பட, பலர் பங்கேற்றனர்.