ADDED : ஜன 20, 2026 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்; கரூர் மாவட்ட கைத்தறி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) சார்பில், மாவட்ட முன்னாள் இ.கம்யூ., செயலாளர் நாட்-ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கரூர் வெண்ணைமலையில் உரிமை பெற்ற நிலங்களில் இருந்து, மக்களை வெளி-யேற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும், கரூரில் கைத்தறி தொழிலை பாது-காக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தமிழக மக்களை ஜாதி, மதம் என்ற பெயரில் துண்டாட நினைக்கும் சமூக விரோதிகளை கண்-டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இ.கம்யூ., செய லாளர் கலாராணி, கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் பழனிசாமி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் ரத்தினம், ஞானவேல், குப்புசாமி, அறிவழகன் உள்பட, பலர் பங்கேற்-றனர்.

