/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்தியன் நேவி அணி அபார வெற்றி
/
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்தியன் நேவி அணி அபார வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்தியன் நேவி அணி அபார வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்தியன் நேவி அணி அபார வெற்றி
ADDED : மே 28, 2024 07:03 AM
கரூர் : கரூரில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், ஆண்கள் பிரிவில் இந்தியன் நேவி அணி வெற்றி பெற்றது.
கரூர் மாவட்ட கூடைப்பந்து கிளப் சார்பில், எல்.ஆர்.ஜி. நாயுடு சுழற்கோப்பைக்கான, 64 வது ஆண்டு, அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த, 22ல் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான இறுதி போட்டியில் லோனாவாலா இந்தியன் நேவி அணியும், டில்லி இந்தியன் ஏர்போர்ஸ் அணியும் மோதியது. அதில், லோனாவாலா இந்தியன் நேவி அணி, 64-55 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்தை டில்லி நார்த்தன் ரயில்வே அணியும், நான்காவது இடத்தை சென்னை ஐ.சி.எப்., அணியும் பிடித்தது.
பெண்கள் பிரிவில், ஹூப்ளி சதர்ன் வெஸ்டர்ன் ரயில்வே அணியும், மும்பை சென்ட்ரல் ரயில்வே அணியும் இறுதி போட்டியில் மோதின. அதில், ஹூப்ளி சதர்ன் வெஸ்டர்ன் ரயில்வே அணி, 61-53 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது இடத்தை, மும்பை வெஸ்டர்ன் ரயில்வே அணியும், நான்காவது இடத்தை, டில்லி நார்த்தன் ரயில்வே அணியும் பிடித்தது.ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக, ஒரு லட்ச ரூபாய், இரண்டாம் பரிசாக, 80 ஆயிரம் ரூபாய், மூன்றாவது பரிசாக, 60 ஆயிரம் ரூபாய், நான்காவது பரிசாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.பெண்கள் அணிக்கு முதல் பரிசாக, 75 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 40 ஆயிரம் ரூபாய், மூன்றாவது பரிசாக, 30 ஆயிரம் ரூபாய், நான்காவது பரிசாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் பரிசு கோப்பை, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.பரிசுகளை டி.ஆர்.ஓ., கண்ணன், கரூர் வைஸ்யா வங்கி சி.ஜி.எம்., சந்திர சேகரன் ஆகியோர் வழங்கினர். அப்போது, மாவட்ட கூடைப்பந்து கிளப் துணை தலைவர் சூர்ய நாராயணா, செயலாளர் முகமது கமாலுதீன், நிர்வாகிகள் இந்திர மூர்த்தி, பெரியசாமி, முகமது அமீன் உள்பட பலர் உடனிருந்தனர்.