/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : டிச 22, 2025 08:52 AM
குளித்தலை: குளித்தலை அண்ணா திருமண மண்டபத்தில், குளித்தலை சட்டசபை தொகுதியை சேர்ந்த மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணையும் விழா நடந்தது. கரூர் மாவட்ட தலைவர் செந்தில்-நாதன் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணை தலைவர் மீனா, மாவட்ட துணை தலைவர் சக்திவேல், மாவட்ட பொதுச்செய-லாளர் சாமிதுரை, ஒன்றிய தலைவர்கள் பொன்-ரஞ்சித், பிரதீப், ராஜ்குமார், ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குளித்தலை அனைத்து வணிகர் சங்க பேரவை தலைவர் ராஜகோபால் தலைமையில், 300க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணைந்தனர்.
அவர்களை, மாவட்ட தலைவர் செந்தில்நாதன், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜகோபால் நன்றி தெரிவித்தார்.

