/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
/
கரூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
ADDED : ஏப் 15, 2025 06:24 AM
கரூர்: கரூரில் உள்ள, தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அம்பேத்கர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், ஜாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், சமத்-துவத்துக்காகவும், வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, எளிய மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய, அம்பேத்கரின் பிறந்த நாளில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாம-சுந்தரி, மேயர் கவிதா, மண்டல தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்னர்.* கரூர் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, செயலாளர் இளங்-கோவன் தலைமையில், கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து, மனோகரா கார்னர் வரை ஊர்வலம் நடந்தது. பிறகு, டாக்டர் அம்-பேத்கர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மேலும், பட்டியலின விடுதலை பேரவை சார்பில், நிறுவன தலைவர் ஆனந்தராஜ் தலைமையிலும், புரட்சி பாரதம் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமையிலும், கரூர் மனோகரா கார்னரில் டாக்டர் அம்பேக்தர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில், கொசூர் பஞ்சாயத்து கம்பளியாம்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் படத்-திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் ராஜவேல், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.* கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரி-யாதை செலுத்தப்பட்டது. மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்ற வன்னியரசு தலைமையில் பலர் பங்கேற்றனர்.