ADDED : ஏப் 15, 2026 06:09 AM
அரவக்குறிச்சி :அம்பேத்கர் பிறந்த
நாளை முன்னிட்டு, அரவக்குறிச்சி அருகே வெள்ளமேடு பகுதி
யில் அவரது படத்துக்கு, எம்.எல்.ஏ., இளங்கோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சட்ட வல்லுனர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் இந்திய அரசியலமைப்பின் முதன்மை சிற்பியான டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் அவரது பிறந்தநாள் சமத்துவ தினம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்லமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அங்கு பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திரு
உருவப்படத்திற்கு,
எம்.எல்.ஏ., இளங்கோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர் ரிபாய்தின் உள்ளிட்ட நிர்வாகிகளும், தி.மு.க., நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
