ADDED : பிப் 10, 2026 05:14 AM
கரூர்: ஜனவரி மாத ஊதியம் வழங்க வேண்டும் என, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கரூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்-டத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில் மொத்தம், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 19 இயக்கப்பட்டு வருகிறது. இதில், 96 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தால், ஜனவரி மாதம் ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் சேவை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் ஊதியத்தை குறைத்து வழங்கு-வதன் மூலம், அவர்கள் வேலையை விட்டு விலகி விடுவார்கள் என்று திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உட-னடியாக ஜனவரி மாதம் ஊதியம் வழங்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
